search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா கடத்தல்"

    • தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது
    • ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு குட்கா விற்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாயாமலேயே உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா விற்பனைக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடை இருந்து வந்தது.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள ஐகோர்ட்டு, அது தொடர்பான வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பயந்து பயந்து பதுக்கி விற்பனை செய்து வந்த நபர்கள் தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் பயமின்றி விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்ட போது வெளியான தகவல்கள் வருமாறு:-

    குட்கா விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக தற்போது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலே உள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே உள்ளது.

    இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் இருந்து என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி உரிய தகவல்கள் எதுவும் வரவில்லை. ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு குட்கா விற்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாயாமலேயே உள்ளது.

    இதில் அடுத்த கட்டமாக மேல் முறையீடு செய்து அதில் எது மாதிரியான தீர்வு வெளியாகிறது என்பதை பொறுத்தே போலீஸ் நடவடிக்கை மீண்டும் தீவிரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் கயத்தாறு சுங்கச்சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கயத்தாறு:

    பெங்களூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் கயத்தாறு சுங்கச்சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக 1,000 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த சுடலை காந்தி (வயது 35) என்பதும், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்த நெல்லை ரெட்டியார்பட்டிக்கு குட்காவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. கடத்தி வந்த குட்காவின் மதிப்பு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து டிரைவர் சுடலை காந்தியை கைது செய்த போலீசார் அவர் ஓட்டிவந்த கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலப்பஞ்சேரி சோதனை சாவடியில் பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தர வதனம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் இருந்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உசேன் (22) ஜெகன் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள கடையில் குட்கா, புகையிலை விற்ற மகேந்திர குமாரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    • பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • பாவூர்சத்திரம் கல்லூரணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பாவூர்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேக்கனிகோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 33), பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு கொண்டலூரை சேர்ந்த வேல்முருகன் (27) என்பதும், காரில் 250 கிலோ குட்கா இருந்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்களுடன் தொடர்புடைய பாவூர்சத்திரம் கல்லூரணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (28) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 3 பேர் கைது செய்யப்பட்டதுடன் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • துடியலூர் போலீசார் துடியலூர்-வெள்ளக்கிணர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் பெரிய நாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. நமச்சிவாயம் மேற்பார்வையில் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திரபிரசாத், காவலர்கள் வீரமணி உள்ளிட்டோர் துடியலூர் வெள்ளக்கிணர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 650 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் வந்த 3 பேரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் அன்னூரை சேர்ந்த பொன்ராஜ், திருப்பூரை சேர்ந்த மதியழகன், கருமத்தம்பட்டியை சேர்ந்த கவுரி சங்கர் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 650 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், ரூ.66 ஆயிரத்து 650 பணம் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • டெம்போவை ஓட்டி வந்த டிரைவரை அழைத்துச் சென்று விசாரித்த போது டெம்போவை ஓட்டி வந்தது ஆண் இல்லை பெண் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
    • தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆண் போல் பேண்ட் சர்ட் அணிந்து கடத்தியதும் அவர் விழுப்புரம் மாவட்டம் பாண்டிச்சேரி ரோட்டை சேர்ந்த நாகராஜனின் மகள் ஈஸ்வரி என தெரியவந்தது.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் எஸ்.பி. கலைச்செல்வன் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதை அடுத்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் கும்பாரஹள்ளி செக்போஸ்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாகச் சென்ற டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட 79 மூட்டை எடை கொண்ட 900 கிலோ குட்கா பொருட்கள் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக டெம்போவை ஓட்டி வந்த டிரைவரை அழைத்துச் சென்று விசாரித்த போது டெம்போவை ஓட்டி வந்தது ஆண் இல்லை பெண் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆண் போல் பேண்ட் சர்ட் அணிந்து கடத்தியதும் அவர் விழுப்புரம் மாவட்டம் பாண்டிச்சேரி ரோட்டை சேர்ந்த நாகராஜனின் மகள் ஈஸ்வரி (வயது 35) என தெரியவந்தது.

    இதை அடுத்து போலீசார் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மதிப்பு சுமார் 5.75 லட்சம் ரூபாய் ஆகும். ஆண் போல் வேடம் அணிந்து பெண் ஒருவர் குட்கா பொருள் கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • மாநகர பகுதியில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • தனிப்படை போலீசார் தினமும் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மாநகர பகுதியில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தினமும் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    நேற்று முன்தினம் மதுரை செல்லூர் மற்றும் மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மதுரை விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ரமேஷ், ஏட்டுகள் சின்னையா, கணேசன் மற்றும் போலீசார் மேல நாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களின் மொபட்டில் வெள்ளை நிற சாக்கு பைகள் வைத்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த சாக்குப்பைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜோகராம் (வயது35), ஹரீஷ் (26) என்பது தெரியவந்தது.

    அவர்கள் இருவரும் மதுரை லட்சுமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்று வந்துள்ளனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 400 கிலோ புகையிலை பாக்கெட்டுகள், ரூ.45 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    • 11 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அருகே ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஓடும் ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனை செய்து வந்தனர்.

    அப்போது ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் சோதனை செய்தனர்.

    வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை பார்த்த போது அதில் 11 கிலோ குட்கா, பான் மசாலா இருந்தது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஓடும் ரெயிலில் போதைப் பொருட்கள் கடத்தியது யார் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கர்நாடகாவிலிருந்து வந்த ஹூண்டாய் காரை சோதனை செய்தனர்.
    • திண்டிவனம் செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தாவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் இன்று காலை ரோசனை இன்ஸ்பெக்டர் பிரு ந்தா,தலைமை காவலர் வெற்றிவேல்,காவலர்கள் அறிவுமணி,தர்மா, போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாட காவிலிருந்து வந்த ஹூண்டாய் காரை சோதனை செய்தனர். அந்த காரில் 40 மூட்டையில் குட்கா பொருட்கள் இருந்தன. காரில் வந்த 3 பேரை பிடிப்பதற்கு முன்பு அவர்கள் தப்பி ஓடினர்.

    போலீசரும் அவர்களைபின் தொடர்ந்து சேற்றில் இறங்கி மடக்கிப் பிடித்து போலீசாரும் குட்கா கொள்ளையர்களும் சேற்றில் புரண்டு ஓடியதை பார்த்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் இங்கு சினிமா சூட்டிங் நடக்கிறதோ அல்லது வேறுஏதேனும் சண்டையோ எனபொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அவர்களைப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் பெங்களூரை சேர்ந்த கிஷோர்,(வயது 29),சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கைலாஷ், ,செஞ்சி காந்தி நகரைச் சேர்ந்த சங்கரான ராம்,என்பதும், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, திண்டிவனம்,செஞ்சி,பகுதிகளில்குட்காவை கடத்தி செல்வதும் தெரிந்தது. திண்டிவனம் செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் மேலும் 3 பேரையும் கைது செய்த போலீசார், 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ேமாட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது..குட்கா கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் பெரிய மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    திருத்தணி:

    திருத்தணி அருகே அம்மனேரி பகுதியில் ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பெரிய மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து சோளிங்கர் பகுதியை சேர்ந்த ஜெயவேலு, திருத்தணி அடுத்த பீரகுப்பம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார், பிரகாசம், பாணாவரம் பகுதியை சேர்ந்த சங்கர் ஆகியோரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    • விழுப்புரம் அருகே குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த போலீசாருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • 3 சமூக விரோதிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம்.கண்டாச்சிபுரம்வழியாக விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக கண்டச்சி புரம் சப்இன்ஸ்பெக்டர் மருதப்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்ப டையில் அவரது தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் பொன்னுரங்கம் மற்றும் போலீசார் கண்டாச்சி புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது திருமலை ராயபுரம் என்ற பகுதியில் ரூ.5 லட்சம் பதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் அதனை கடத்துவதற்கு வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் 3 சமூக விரோதிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஒவ்வொருமாதமும் காவல்துறையில் காவலர்களின் மெச்ச தகுந்த பணியினை பாராட்டி சான்றிதழ்களும் பாராட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதிகளில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்செய்து சமூக விரோதிகளை சிறைக்கு அனுப்பி வைத்த சப்- இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், பொண்ணுரங்கம் போலீசார்கள் ஜீவா, சிவக்குமார் உள்ளிட்டோர்களின் மெச்ச தகுந்த பணியினை விழுப்புரம் மாவட்ட எஸ். பி. ஸ்ரீநாதா பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினர்.

    திண்டிவனத்தில் கடந்த 12ந் தேதி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த நவீன் கைது செய்துசிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உரிய நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த திண்டிவனம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் தனிப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் போலீசார் ஜனார்த்தனன், பூபாலன், செந்தில்முருகன், கோபாலகிருஷ்ணன் மற்றும் பரந்தாமன் ஆகியோரை பாராட்டி எஸ் பி ஸ்ரீநாதா சான்றிதழ்களை வழங்கினார். 

    • விழுப்புரம் அருகே குட்கா கடத்த முயன்ற அண்ணன்- தம்பிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்து கொண்டிருந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்திற்கு பேருந்துகள் மற்றும் மினி லாரிகள்,போக்குவரத்து லாரிகள் இரண்டு சக்கர வாகனம் மூலம் குட்கா கடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் போலீசார் கடைவீதியில் உள்ள பெட்டி கடைகளிலும் சோதனை மேற்கொண்டார். அப்பொழுது பல இடங்களில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் கண்டாச்சிபுரம் ஒரத்தூர் சாலையில் சப்- இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்து கொண்டிருந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர். அதில் குட்கா, புகையிலை பொருட்கள் ஏற்றி வந்தனர். விசாரணையில் மணிகண்டன், அவரது சகோதரர்கள் மூர்த்தி, கார்த்திக் என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்என தெரியவந்தது.தெரியவந்தது. 

    ×